முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் வெந்தய சீரம்.., எப்படி தயாரிப்பது?
பொதுவாக பலருக்கும் இருக்கும் பிரச்சனைகளில் முடி பிரச்சனைகளும் ஒன்று.
முடி உதிர்தல், பொடுகு தொல்லை, வழுக்கை, வலுவிழந்த முடி மற்றும் நரை முடி என பல்வேறு முடி பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம்.
அந்தவகையில், முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் வெந்தய சீரமை எப்படி தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வெந்தயம்- 2 ஸ்பூன்
- தண்ணீர்- 1 கப்
எப்படி தயாரிப்பது?
முதலில் வெந்தயத்தை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
மறுநாள் காலையில் அதன் தண்ணீரை மட்டும் வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும்.
இதனை தினமும் இரவு உறங்கச் செல்வதற்கு முன்பாக தலையில் தெளிக்கவும்.

பின் மெதுவாக ஒரு 10 நிமிடம் தலையில் மசாஜ் செய்யவும்.
புரதம் மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்த வெந்தயம் உச்சந்தலைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்துகிறது.
இதனால் முடி உதிர்வது, அடர்த்தி குறைவது போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படுகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |