வறண்ட முடியை மென்மையாக மாற்ற இந்த ஒரு விதை போதும்.., எப்படி பயன்படுத்துவது?
ரசாயனம் கலந்த முடி பராமரிப்பு பொருட்கள், ஹார்மோன் பிரச்சனைகள் காரணமாக தலைமுடி பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன.
அந்தவகையில், பட்டுபோன்ற மென்மையான கூந்தலை பெற ஆளி விதையை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ஆளிவிதை- ½ கப்
- தண்ணீர்- 2 கப்
- வைட்டமின் ஈ காப்ஸ்யூல்- 1
பயன்படுத்தும் முறை
முதலில், ஒரு வாணலியில் தண்ணீரைச் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.
பின் கொதிக்கின்ற தண்ணீரில் ஆளி விதைகளை சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
தண்ணீர் நன்கு கெட்டியாகத் தொடங்கி ஜெல் போன்றதாக மாறும். பின் இந்த ஜெல்லை வடிகட்ட வேண்டும்.
ஜெல் சூடாக இருக்கும்போதே, அதில் வைட்டமின் ஈ காப்ஸ்யூல் சேர்த்து கலக்கவும்.
இதற்கடுத்து ஜெல்லை நன்கு ஆறவைத்து ஒரு சுத்தமான கொள்கலனில் மாற்றவும்.
ஆளிவிதை ஜெல்லை உச்சந்தலையில் முடியில் தடவி, மெதுவாக மசாஜ் செய்யவும்.
பின்னர் வேர்கள் முதல் நுனி வரை ஜெல்லை தலைமுடி முழுவதும் சமமாக தடவி 2 மணி நேரம் விட்டுவிட்டு, லேசான ஷாம்பூ கொண்டு கழுவவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |