ஒரே வாரத்தில் முகத்தை வெள்ளையாக்க உதவும் மாவு.., எப்படி பயன்படுத்துவது?
முகத்தில் பருக்கள் உண்டான பிறகு ஏற்படும் கரும்புள்ளிகள் முகத்தின் அழகை கெடுக்கும் விதமாக உள்ளன.
சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
அந்தவகையில், ஒரே வாரத்தில் முகத்தை வெள்ளையாக்க கடலை மாவை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- கடலை மாவு- 2 ஸ்பூன்
- பப்பாளி சாறு- 2 ஸ்பூன்
- ஆரஞ்சு சாறு- 2 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் கடலை மாவுடன், சிறிது பப்பாளி சாறு மற்றும் சிறிது ஆரஞ்சு பழச்சாற்றினை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின்பு அதை முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.
அதன் பின் குளிர்ந்த நீரால் முகதைக் கழுவ வேண்டும்.
2. தேவையான பொருட்கள்
- கடலை மாவு- 2 ஸ்பூன்
- மஞ்சள்- ¼ ஸ்பூன்
- தேன்- 1 ஸ்பூன்
- தயிர்- 1 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, மஞ்சள் தூள் மற்றும் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின் அதனையுடன் தயிர் மற்றும் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின்பு இதனை முகத்தில் தடவி, நன்கு காய வைக்க வேண்டும்.
இறுதியாயக குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |