நரைமுடியை கருப்பாக்க இந்த 4 பொருள் போதும்.., இயற்கை டை தயாரிக்கலாம்
பொதுவாக அனைவருக்கும் முடி உதிர்தல், வலுவிழந்த முடி, வறண்ட முடி, பொடுகு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் இருக்கிறது.
இருப்பினும், இன்றைய நாளில் பெரும்பலான இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை நரை முடி.
அந்தவகையில், இயற்கையான முறையில் நரைமுடியை கருப்பாக மாற்ற இந்த 4 பொருட்களை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அவுரிப்பொடி- 2 ஸ்பூன்
- வெந்தயம் - 1 ஸ்பூன்
- டீத்தூள்- 2 ஸ்பூன்
- நெல்லிப்பொடி- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு வாணலை அடுப்பில் வைத்து மிதமான தீயில் வெந்தயத்தை நன்றாக வறுத்து ஆறவைத்து பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அதில் டீத்தூள் சேர்த்து கொதித்ததும் அடுப்பை அனைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து இந்த டீ நீரில் அரைத்த வெந்தயத்தை சேர்த்து கலந்து கெட்டியாகி எடுத்துக்கொள்ளவும்.
பிறகு இரும்பு பாத்திரத்தில் இதை சேர்த்து அவுரிப்பொடி மற்றும் நெல்லிப்பொடி சேர்த்து நன்றாக கலக்கவும்.
இதற்கடுத்து இதை இரவு முழுவதும் மூடி வைத்திருந்து மறுநாள் கூந்தலில் தடவி 30 முதல் 45 நிமிடங்கள் வரை வைத்திருந்து குளிக்கவும்.
வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இதை தொடர்ந்து பயன்படுத்துவதால் முடி நிரந்தரமாக கருமையாக மாறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |