கவர்ச்சிகரமான நீண்ட தலைமுடியை பெற உதவும் இயற்கை எண்ணெய்: எப்படி தயாரிப்பது?
முடி வளர்ப்பது என்பது தற்போது அனைவருக்கும் இருக்கும் ஒரு ஆசை.
பலபேருக்கு வழுக்கை, முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பிரச்சனைகள் காரணமாக முடி கொட்டி விடுகின்றன.
அந்தவகையில், அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கற்றாழை- 5 துண்டு
- புதினா- 1 கைப்பிடி
- கருஞ்சீரகம்- ஒரு ஸ்பூன்
- வெந்தயம்- ஒரு ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய்- 2 கப்
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் கற்றாழை மற்றும் புதினா சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
பின் ஒரு கடாயில் கற்றாழை மற்றும் புதினா அரைத்த கலவையை சேர்த்து குறைவான தீயில் கொதிக்க விடவேண்டும்.
அடுத்து இதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து அடுப்பை குறைவான தீயில் வைத்து கலக்க வேண்டும்.
எண்ணெய் நன்கு கொதித்து பிரிந்து வரும்போது கருஞ்சீரகம், வெந்தயம் சேர்த்து உடனே அடுப்பை அணைத்துவிடவேண்டும்.
பின் எண்ணெயை அப்படி விட்டு நன்றாக ஆறியவுடன், வடிகட்டவேண்டும்.
இறுதியாக அந்த எண்ணெயில் அளவில் கால் பங்கு விளக்கெண்ணெய் சேர்த்து கலந்துகொள்ளவும்.
இந்த எண்ணெயை வெளியில் வைத்து தினமும் தலைக்கு பயன்படுத்தலாம்.
அல்லது இரவில் தலையில் தடவிவிட்டு, காலையில் தலைமுடியை அலசலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |