அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் அதிசய எண்ணெய்.., எப்படி தயாரிப்பது?
ஆண், பெண் என அனைத்து மனிதர்களுக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை முடி உதிர்வு தான்.
அந்தவகையில், முடி உதிர்வை நிறுத்தி அடர்த்தியாக வளர வீட்டிலேயே எளிய முறையில் எண்ணெய் தயார் செய்து பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்
- கருஞ்சீரகம்- 2 ஸ்பூன்
- வெந்தயம்- 2 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய்- 200ml
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் கருஞ்சீரகம், வெந்தயம் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு கிண்ணத்தில் அரைத்த கருஞ்சீரக வெந்தய பொடியை சேர்த்து அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலக்கவும்.
பின் ஒரு பத்திரத்தில் 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும். அடுத்து கொதிக்கின்ற நீரில் எண்ணெய் கலந்து வைத்த பாத்திரத்தை வைக்கவும்.
இதற்கடுத்து எண்ணெய் சூடாகி நன்கு நிறம் மாறி வந்ததும் இதனை எடுத்து ஆறவைக்கவும்.
எண்ணெய் ஆறியதும் ஒரு பருத்தியை எண்ணெயில் நனைத்து உச்சந்தலையில் நன்கு தேய்க்கவும்.
அதன் பின் முடி அனைத்திலும் எண்ணெய் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.
இதனை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ந்து பயன்படுத்தினால் முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |