முடி அடர்த்தியாக வளர! வீட்டிலேயே மூலிகை எண்ணெய் தயாரிக்கலாம்
அனைத்து மனிதர்களுக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை முடி உதிர்வு தான். முடி ஒருவரை அழகாகவும் இனிமையாகவும் காட்டக்கூடியது.
ஆனாலும் பலரும் முடிக்காக நேரமும் பணமும் செலவிட யோசிப்பதில்லை.
இன்னும் சிலர் பிறரின் ஆலோசனைகளை கேட்டு செலவு செய்து கண்ட எண்ணெய்களை வாங்கி பயன்படுத்தி முடியை இழக்கிறார்கள்.
இதுபோன்று செய்யாமல் வீட்டிலேயே கிடைக்க கூடிய பொருட்களை கொண்டு எளிய முறையில் எண்ணெய் தயார் செய்து பயன்படுத்தி வரலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்- 2 லிட்டர்
- கறிவேப்பிலை- ஒரு கைப்பிடி
- செம்பருத்தி பூ- 10 பூ
- செம்பருத்தி இலை- ஒரு கைப்பிடி
- வேப்பிலை- ஒரு கைப்பிடி
- மருதாணி இலை- ஒரு கைப்பிடி
- சாம்பார் வெங்காயம்- 5
- சோற்றுக்கற்றாலை- ஒரு கப்
- வெந்தயம்- 2 டீஸ்பூன்
- பெரிய நெல்லிக்காய்- 3
- கருசீரகம்- 2 டீஸ்பூன்
- வெட்டிவேர்- ஒரு கைப்பிடி
செய்முறை
ஒரு பெரிய இரும்பு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்கு காயவிடவும்.
பின் அதில் கறிவேப்பிலை, வேப்பிலை, மருதாணி இலை மற்றும் முடி அடர்த்தியாக வளர கரிசலாங்கண்ணி, இடித்த வெங்காயம், இடித்த நெல்லிக்காய் சேர்க்க வேண்டும்.
பின் இதில் கற்றாலையை நன்றாக கழுவி சேர்க்க வேண்டும்.
பின்னர் இதனுடன் வெந்தயம், கருஞ்சீரகம், வெட்டி வேர் போன்றவர்றை மிதமான தீயில் வைத்து கொதிக்க விட வேண்டும்.
சேர்க்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் நன்றாக நிறம் மாறி வரும் வரை அதனை காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒருநாள் முழுவதும் அதே பாத்திரத்தில் வைக்க வேண்டும்.
பின் அதனை வடிகட்டி அதனை தேவையான டப்பாக்களில் வைத்து பயன்படுத்தலாம்.
இரண்டு, மூன்று மாதங்கள் இருந்தாலும் இந்த எண்ணெய் கெட்டுப்போகாது. முடிகொட்டுதலை நிறுத்தி முடி அடர்த்தி அதிகமாக்கவும், பொடுகு தொல்லை உள்ளவர்களுக்கும் இந்த எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |