கட்டுக்கடங்காத கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய்.., வீட்டிலேயே தயாரிக்கலாம்
பொதுவாக பலருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை முடி உதிர்வு தான்.
தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
அந்தவகையில், கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் எண்ணெயை வீட்டிலேயே எப்படி தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய் - 1 கப்
- வெந்தயம் - 1 ஸ்பூன்
- கருஞ்சீரகம் - 1 ஸ்பூன்
- செம்பருத்தி பூக்கள் - 2-3
எப்படி தயாரிப்பது?
முதலில் வெந்தயம் மற்றும் கருஞ்சீரகத்தை லேசாக இடித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை சேர்த்து அடுப்பில் வைத்து, குறைவான தீயில் வைத்து சூடாக்கவும்.
பின்பு அதில் தட்டி வைத்துள்ள வெந்தயம் மற்றும் கருஞ்சீரகத்தை சேர்க்க வேண்டும்.
அதன் பின் உலர்த்திய செம்பருத்தி பூக்களின் இதழ்களை சேர்த்து கிளறி, நன்கு கொதிக்கவைத்து பின் இறக்கி குளிர வைக்க வேண்டும்.

எண்ணெய் குளிர்ந்த பின் அதை ஒரு துணியில் வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
எண்ணெயை எடுத்து உச்சந்தலையில் படும்படி தடவி, நன்கு மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
பின் 30 நிமிடம் முதல் 1 மணிநேரம் வரை நன்கு ஊற வைத்து மென்மையான ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை குளிர்ந்த நீரால் அலச வேண்டும்.
இந்த எண்ணெயை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வந்தால், தலைமுடி உதிர்வது குறைவதோடு, தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும்.