வறண்ட முடியை பட்டுப்போல் மென்மையாக்க உதவும் தயிர்.., எப்படி பயன்படுத்துவது?
Homemade hair pack for soft, silky hair- பொதுவாக பலருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை முடி உதிர்வு தான்.
தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல், பலருக்கும் முடி மென்மையாக இல்லாமல் வறண்டு காணப்படும்.
இயற்கையான வீட்டு வைத்தியங்களை பயன்படுத்துவதன் மூலம் கூந்தலை மென்மையாக மாற்றலாம்.
அந்தவகையில், பட்டுபோன்ற மென்மையான கூந்தலை பெற தயியரை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தயிர்- 1 கப்
- கறிவேப்பிலை- ஒரு கைப்பிடி
எப்படி பயன்படுத்துவது?
முதலில் கறிவேப்பிலையை எடுத்து நன்கு கழுவி மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் தயிர் சேர்த்து கெட்டியான பேஸ்டாக அரைக்கவும்.
அடுத்து இதனை ஒரு கிண்ணத்தில் சேர்த்து மென்மையாக வரும்வரை கைவிடாமல் நன்கு கலக்கவும்.

இப்போது இந்த கலவையை தலைமுடியின் உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்யவும்.
பின்னர் அரை மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு மென்மையான ஷாம்பு கொண்டு கழுவவும்.
இந்த இயற்கை வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பயன்படுத்தி வர தலைமுடி நல்ல பளபளப்பாக மென்மையாக மாறும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |