கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் செம்பருத்தி இலை.., எப்படி பயன்படுத்துவது?
பொதுவாக ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் முடி உதிர்வு.
தூக்கமின்மை, உணவு முறை, மருந்து மாத்திரைகள் உண்பது போன்ற காரணங்களால் முடி உதிர்வு பிரச்சனைகள் ஏற்படுகிறது.
அந்தவகையில், கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் செம்பருத்தி இலையை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
செம்பருத்தி இலை மற்றும் பூக்கள் கூந்தல் வளர்ச்சிக்கு மிகச்சிறந்த இயற்கை மூலிகையாகும்.
இதில் உள்ள அமினோ அமிலங்கள் மற்றும் கெரட்டின் மூலம் கூந்தலை வேரிலிருந்து பலப்படுத்தி முடி உதிர்வைக் குறைக்கிறது.
மேலும், இது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தைத் தூண்டி, பொடுகுத் தொல்லையை நீக்க உதவுகிறது.
குறிப்பாக இளநரையைத் தடுத்து, கூந்தலுக்கு அடர்த்தியான, பளபளப்பான மற்றும் கருகருவென்ற தன்மையை அளிக்கிறது.
தேவையான பொருட்கள்
- செம்பருத்தி இலை- 1
- செம்பருத்தி பூ- 2
- வெந்தயம்- 3 ஸ்பூன்
- அரிசி- 2 ஸ்பூன்
- பாசிப்பருப்பு - 4 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு பாத்திரத்தில் செம்பருத்தி இலை, செம்பருத்தி பூ, வெந்தயம், அரிசி, பாசிப்பருப்பு ஆகியவரை சேர்த்து கலந்துகொள்ளவும்.
பின் இந்த பொருட்கள் அனைத்தும் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து தண்ணீர் வற்றியவுடன் ஆறவைத்துக் கொள்ளவும்.

பின்னதாக இந்த கலவையை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
இதனை உச்சந்தலையிலிருந்து தலைமுடியின் நுனி வரை தடவி ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளவும்.
இந்த கலவையை தொடர்ந்து தலைமுடிக்கு பயன்படுத்தி வர கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |