முடி வளர்ச்சியை 5 மடங்கு அதிகரிக்கும் ஆளி விதை ஹேர் சீரம்: எப்படி தயாரிப்பது?
தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
அந்தவகையில் நீண்ட, ஆரோக்கியமான முடியை பராமரிக்க இயற்கையான பொருட்களின் பயன்படுத்த வேண்டும்.
தலைமுடி வளர்ச்சியை வேகமாக அதிகரிக்க இந்த ஆளி விதை ஹேர் சீரம் போதும், இதை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
- ஆளி விதை பொடி - 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை - 15
- ரோஸ் வாட்டர் - 4 ஸ்பூன்
- தண்ணீர் - ஒரு டம்ளர்
- கற்றாழை ஜெல் - 2 ஸ்பூன்
- விளக்கெண்ணெய் - 1 ஸ்பூன்
- வைட்டமின் ஈ ஆயில் - 2
செய்முறை
ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு அதில் ஆளி விதை பொடியை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். ஜெல் பதத்துக்கு வந்ததும் அதை எடுத்து தனியே ஆற வைத்து விடுங்கள்.
மற்றொரு பௌலில் கறிவேப்பிலை அரைத்து சாறாக எடுத்துக் கொள்ளுங்கள்.
Shutterstock
இந்த சாற்றோடு கற்றாழை ஜெல், விளக்கெண்ணெய், வைட்டமின் ஈ ஆயில், ரோஸ்வாட்டர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
இந்த கலவையை ஆறவைத்திருக்கும் ஆளி விதை ஜெல்லுடன் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம்.
பயன்படுத்துவதற்கு முன்பு இதிலிருந்து 1-2 ஸ்பூன் அளவு எடுத்து அதில் அரை ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து செய்து முடியின் வேர்க்கால்கள் முதல் நுனி வரை அப்ளை செய்து, பின்பு 1 மணி நேரம் கழித்து குளிக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |