முடி கொத்து கொத்தா கொட்டுதா? ஒரே ஒரு வாரம் இந்த ஒரு சீரத்தை யூஸ் பண்ணாலே போதும்
இன்றைய சூழலில் முடி உதிர்தல் மற்றும் வழுக்கை வருதல் ஆகியவை பொதுவான ஒரு பிரச்சினையாக இருகின்றது.
மாசுபடுத்திகள் துளைகளை அடைக்கின்றன, அதே நேரத்தில் புற ஊதா கதிர்கள் முடியை உலர்த்துவதன் மூலமும் நிறமிகளாக்குவதன் மூலமும் சேதமடைகின்றன.
முடி வளர்ச்சிக்காக வீட்டில் தயாரிக்கப்பட்ட சீரம் முடியைப் பாதுகாக்கிறது, அதே நேரத்தில் சேதமடைந்தலுக்கும் நிவாரணம் தருகிறது.
வீட்டில் தயாரிக்கப்பட்ட முடி சீரம் என்பது பொடுகு பிரச்சினைகளுக்கும் சிகிச்சையளிக்கும். இது இரத்த ஓட்டத்தைத் தூண்டுவதன் மூலமும் கொலாஜன்களை அடைப்பதன் மூலமும் முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது.
இவ்வகையான ஏராளமான நன்மைகளைக் கொண்டுள்ள இந்த பிரச்சினைகளை சரி செய்வதால் இந்த சீரத்தை இலகுவான முறையில் எப்படி வீட்டிலேயே செய்யலாம் என பார்க்கலாம்.
Hair Serum செய்வது எப்படி?
முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் அளவு தண்ணீரை சேர்த்துக்கொள்ளவும்.
அதில் 1 டீஸ்பூன் டீ தூள், 1 ஸ்பூன் வெந்தயம், 1 கைப்பிடியளவு மருதாணி இலை, 2 பெரிய வெங்காயத்தின் தோல் என அனைத்தையும் சேர்த்துக்கொள்ளவும்.
1கப் தண்ணீரை 1கப் தண்ணீராகும் வரை சுண்ட கொதிக்க வைக்கவும்.
பின் அதை வடிக்கட்டி எடுத்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும்.
எப்படி பயன்படுத்துவது?
தலைமுடியின் வேர்க்கால்களில் படும்படி ஸ்ப்ரே செய்து மென்மையாக சுமார் 30 நிமிடங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும்.
பின் ஷாம்புவை பயன்படுத்தி முடியை சுத்தமாக கழுவிக்கொள்ளவும்.
இதை வாரத்தில் மூன்று வரை தொடர்ந்து செய்து வர தலைமுடியானது கருகருவென அடர்த்தியாக வளரும் என்பது உறுதி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |