உடலிற்கு சத்தான புரோட்டீன் நிறைந்த Health Mix.., வீட்டிலேயே தயாரிக்கலாம்
காலை உணவை தொடர்ச்சியாக தவிர்த்து வந்தால் அல்சர் மற்றும் வயிற்றுப் புண் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
காலை உணவை தவிர்ப்பவர்கள் புரோட்டீன் நிறைந்த இந்த Health Mix பானத்தை தினமும் குடித்து வர உடலுக்கு ஊட்டச்சத்தும் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்
- பாதாம்- 1 கப்
- முந்திரி- 1 கப்
- வால்நட் - 1 கப்
- தாமரை விதை- 3 கப்
- எள்ளு- ½ கப்
- வேர்க்கடலை- 1 கப்
- பூசணி விதை- 1 கப்
- ஏலக்காய்- 5
- சர்க்கரை- 2 கப்
- பால்- 1 கப்
செய்முறை
முதலில் ஒரு வாணலை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் பாதாம், முந்திரி மற்றும் வால்நட் சேர்த்து மிதமான தீயில் வைத்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அதே வாணலில் தாமரை விதை, எள்ளு, வேர்க்கடலை, பூசணி விதை ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து இவையனைத்தையும் ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதில் ஏலக்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இந்த அரைத்த பொடியை ஒரு கண்ணாடி பாட்டிலில் சேகரித்து தினமும் பாலில் கலந்து குடிக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |