முடி உதிர்வை நிறுத்த உதவும் மருதாணி பொடி.., எப்படி பயன்படுத்துவது?
பொதுவாக ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் முடி உதிர்வு.
தூக்கமின்மை, உணவு முறை, மருந்து மாத்திரைகள் உண்பது போன்ற காரணங்களால் முடி உதிர்வு பிரச்சனைகள் ஏற்படுகிறது.
அந்தவகையில், முடி உதிர்வை நிரந்தரமாக நிறுத்த மருதாணி பொடியை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மருதாணி பொடி- 3 ஸ்பூன்
- நெல்லிக்காய் பொடி- 3 ஸ்பூன்
- முட்டை- 1
- எலுமிச்சை- ½
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் மருதாணி பொடி மற்றும் நெல்லிக்காய் பொடி ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும்.
பின் இதனுடன் ஒரு முட்டை மற்றும் எலுமிச்சை சாறை பிழிந்து சேர்த்துக்கொள்ளவும்.
அடுத்து இந்த அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கெட்டியான பேஸ்ட்போல் கலக்கவும்.

இந்த கலவையை தலைமுடி மற்றும் உச்சந்தலையில் தடவி, சுமார் ஒரு மணி நேரம் ஊறவிடவும்.
அதற்கு பின்னர், மிதமான ஷாம்பு கொண்டு தலையை அலசிக்கொள்ளலாம்.
இந்த கலவையை முடிக்கு வாரத்திற்கு ஒரு முறை என தொடர்ந்து பயன்படுத்தி வர முடி உதிர்வை நிரந்தரமாக நிறுத்த உதவும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |