கட்டுக்கடங்காத கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் மூலிகை எண்ணெய்.., வீட்டிலேயே தயாரிக்கலாம்
பொதுவாக அனைவருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை முடி உதிர்வு தான். முடி ஒருவரை அழகாக காட்டக்கூடியது.
தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
அந்தவகையில், அடர்த்தியாகவும் நீளமாகவும் முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்- 1 லிட்டர்
- செம்பருத்தி பூ- 20
- வேப்ப இலை- 1 கைப்பிடி
- கறிவேப்பிலை- 1 கைப்பிடி
- சிறிய வெங்காயம் - 5
- வெந்தயம்- 1 ஸ்பூன்
- கற்றாழை- 1 இலை
- மல்லிகை பூ- 20
தயாரிக்கும் முறை
முதலில் வெந்தயத்தை 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த வெந்தயம், செம்பருத்தி பூ, வேப்ப இலை, கறிவேப்பிலை, சிறிய வெங்காயம், ஊறவைத்த வெந்தயம், கற்றாழை, மல்லிகை பூ சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு இரும்பு வாணலில் தேங்காய் எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் வைத்து சூடுபடுத்தவும்.
எண்ணெய் சூடானதும் அதில் அரைத்து வைத்த பொருட்களை சேர்த்து மிதமான தீயில் வைத்து கொதிக்கவிடவும்.
இதற்கடுத்து எண்ணெய் நன்கு நிறம் மாறி வந்ததும் இந்த எண்ணெயை நன்கு ஆறைவைத்து வடிகட்டவும்.
இந்த எண்ணெயை தொடர்ந்து தலைமுடிக்கு பயன்படுத்தி வர முடி நன்கு அடர்த்தியாகவும், நீளமாகவும் வளரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |