முடியின் பின்னலை அடர்த்தியாக்க உதவும் மூலிகை எண்ணெய்.., எப்படி தயாரிப்பது?
அனைவருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை முடி உதிர்வு தான். தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
அந்தவகையில், முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர உதவும் மூலிகை எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கற்றாழை ஜெல்- 3 ஸ்பூன்
- கரிசலாங்கண்ணி இலை- 1 கைப்பிடி
- செம்பருத்தி இலை- 1 கைப்பிடி
- வேப்பிலை- ½ கைப்பிடி
- செம்பருத்தி பூ- 1 கைப்பிடி
- கருவேப்பிலை- 1 கைப்பிடி
- மருதாணி- 1 கைப்பிடி
- வெந்தயம்- 5 ஸ்பூன்
- கருஞ்சீரகம்- 3 ஸ்பூன்
- பெரிய நெல்லிக்காய்- 2
- அவுரி பொடி- 2 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
ஒரு பெரிய இரும்பு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் நன்கு காயவிடவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் கற்றாழை ஜெல்- 3 டீஸ்பூன் கரிசலாங்கண்ணி இலை, செம்பருத்தி இலை, வேப்பிலை, செம்பருத்தி பூ, கருவேப்பிலை, மருதாணி, வெந்தயம், கருஞ்சீரகம், பெரிய நெல்லிக்காய், அவுரி பொடி ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த கலவையை காய்ந்த தேங்காய் எண்ணெயில் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். ஒரு 5-7 நிமிடம் கொதித்த பின்பு இறக்கி ஆறவிடவும்.
எண்ணெய் நன்கு ஆறியதும் வடிகட்டி ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்துக்கொள்ளலாம்.
தொடர்ந்து இந்த எண்ணெயை பயன்படுத்தி வந்தால் முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி நீளமாகவும் அடர்த்தியாகவும் முடி வளரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |