இடுப்பு வரை வேகமாக முடி வளர உதவும் மூலிகை எண்ணெய்: வீட்டிலேயே தயாரிக்கலாம்
உணவு பழக்கவழக்கம், காற்று மாசுபாடு மற்றும் ஒழுங்கற்ற கூந்தல் பராமரிப்பு போன்றவற்றால் முடி வளர்ச்சியை தடுத்து முடி உதிர்வு ஏற்படுகிறது.
இந்த சூழ்நிலையில் நாம் தினசரி நாட்களில் சில மாற்றங்களை செய்வதன் மூலம், முடி வளர்ச்சியை மீண்டும் அதிகரிக்கலாம்.
அந்தவகையில் தலைமுடிக்கு இயற்கை முறையில் வளர்ச்சியை கொடுக்கும் மூலிகை எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்- 1 லிட்டர்
- கற்றாழை- 2 துண்டு
- வெந்தயம்- 2 ஸ்பூன்
- துளசி- 1 கைப்பிடி
- மருதாணி இலை- 2 கைப்பிடி
- செம்பருத்தி இலை- 10
- கறிவேப்பிலை- 1 கைப்பிடி
- சின்ன வெங்காயம்- 10
- நெல்லிக்காய்- 5
- மிளகு- 10
- செம்பருத்தி பூ- 20
தயாரிக்கும் முறை
முதலில் கற்றாழையை எடுத்து அதன் மேல் கீறல் போட்டு அதனுள் வெந்தயத்தை சேர்த்து அழுத்தி 2 நாட்கள் அப்படியே ஊறவைக்கவும்.
அதன் பின் ஒரு இரும்பு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் சூடுபடுத்தவும்.
பின்னர் இதில் ஊறவைத்த வெந்தயம், கற்றாழை ஜெல், துளசி இலை, மருதாணி இலை, செம்பருத்தி இலை, கறிவேப்பிலை, இடித்த சின்ன வெங்காயம், இடித்த நெல்லிக்காய், மிளகு சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவைக்கவும்.
இதன் பின் இதில் செம்பருத்தி பூ சேர்த்து மிதமான தீயில் போட்ட அனைத்து பொருட்களும் மொறுமொறுப்பாக வரும்வரை கொதிக்கவைக்கவும்.
நன்கு நிறம் மாறி வந்ததும் இதனை அப்படியே 3 நாட்கள் வைக்கவும்.
இதன் பின் இந்த மூலிகை எண்ணெயை வடிகட்டி ஒரு பாட்டிலில் மாற்றி வைத்து தலைமுடிக்கு பயன்படுத்தலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |