வளராத முடியையும் நீளமாக வளர்க்க உதவும் ரகசிய எண்ணெய்.., எப்படி தயாரிப்பது?
முடி உதிர்தல், பொடுகு தொல்லை, வழுக்கை, வலுவிழந்த முடி மற்றும் நரை முடி என பல்வேறு முடி பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம்.
அந்தவகையில், இயற்கையான முறையிலேயே முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வேம்பாளம்பட்டை- 10g
- வெட்டிவேர்- 10g
- ஜடாமான்சி வேர்- 10g
- காய்ந்த செம்பருத்தி- 8
- காய்ந்த நெல்லிக்காய்- 7
- விளக்கெண்ணெய்-1 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய்- ½ லிட்டர்
- கருஞ்சீரகம்- 1 ஸ்பூன்
- வெந்தயம்- 1 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு கடாயில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதன் மேல் ஒரு பாத்திரத்தை டபுள் பாய்லிங் முறையில் வைக்கவும்.
பின் அந்த பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானாக்கவும்.
எண்ணெய் நன்கு சூடாகி வந்ததும் இதில் வேம்பாளம்பட்டை, வெட்டிவேர், ஜடாமான்சி, காய்ந்த செம்பருத்தி, காய்ந்த நெல்லிக்காய், வெந்தயம், கருஞ்சீரகம் மற்றும் விளக்கெண்ணெய் சேர்த்து நிறம் மாறி வரும்வரை சூடாக்கவும்.
இதற்கடுத்து எண்ணெயை நன்கு ஆறவைத்து ஒரு நாள் இரவு முழுக்க அப்படியே வைத்து பின் வடிகட்டிக்கொள்ளவும்.
இறுதியாக இதனை தலைமுடியில் தடவி 1 மணி நேரம் கழித்து மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.
இதனை தொடர்ந்து பயன்படுத்தி வர தலைமுடி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளரும். மேலும், இளநரையையும் தடுக்க உதவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |