முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் வெந்தய ஷாம்பு.., எப்படி தயாரிப்பது?
பொதுவாக, பெண்களுக்கு முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பல பிரச்சனைகள் இருக்கும்.
தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றை முறையாக மேற்கொள்ள வேண்டும்.
அந்தவகையில், முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் வெந்தய ஷாம்பு எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அரிசி- 1 ஸ்பூன்
- வெந்தயம்- 1 ஸ்பூன்
- டீ தூள்- 1 ஸ்பூன்
- தண்ணீர்- 2 கப்
- ஷாம்பு- 1 பாக்கெட்
எப்படி தயாரிப்பது?
முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி, வெந்தயம், டீ தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் இதனை வடிகட்டி எடுத்து ஆறவைத்துக்கொள்ளவும்.

அடுத்து இதில் ஷாம்பூ சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
இதற்கடுத்து இதனை எப்பொழுதும் போல தலையில் தேய்த்து குளித்துக்கொள்ளலாம்.
இந்த ஷாம்பூவை தொடர்ந்து தலைமுடிக்கு பயன்படுத்தி வர முடி உதிர்வு நின்று அடர்த்தியாகவும், நீளமாகவும் வளரும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |