முடி உதிர்வை நிரந்தரமாக நிறுத்த உதவும் மூலிகை ஷாம்பு.., எப்படி தயாரிப்பது?
கடைகளில் விற்கப்படும் ஷாம்பூக்களில் அதிகளவு இரசாயனங்கள் கலக்கப்படுவதால் முடிஉதிர்வு, பொடுகு போன்ற பிரச்சனைகள் வரக்கூடும்.
இயற்கை முறையிலான ஷாம்பூவை பயன்படுத்தினால் மட்டுமே முடி உதிர்வு நிரந்தரமாக நீங்கும்.
அந்தவகையில், வீட்டிலேயே தலைமுடி அடர்த்தியாக வளர மூலிகை ஷாம்பு எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தண்ணீர்- 1½ கப்
- ரீத்தா பொடி- 6 ஸ்பூன்
- சீயக்காய் பொடி- 6 ஸ்பூன்
- நெல்லிக்காய் பொடி- 6 ஸ்பூன்
- கற்றாழை ஜெல்- 2 ஸ்பூன்
- ஆளி விதைகள்- ½ கப்
- செம்பருத்தி பூ பொடி- 4 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் ரீத்தா, சீகக்காய் மற்றும் நெல்லிக்காய் பொடி சேர்த்து கலக்க வேண்டும்.
பின் கொதிக்கின்ற தண்ணீரில் ஆளி விதைகளை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
அடுத்து இப்போது செம்பருத்தி பூ பொடியை எடுத்து, தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் நன்கு கலக்கவேண்டும்.
இதற்கடுத்து அனைத்தையும் ஒன்றாக கலந்து அதனையுடன் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து ஆறியதும் இவையனைத்தையும் வடிகட்டவும்.
பின்னர் இதனை காற்று புகாத கொள்கலனில் சேமித்து தலைமுடிக்கு ஷாம்பு போல பயன்படுத்தலாம்.
இந்த மூலிகை ஷாம்பூவை தொடர்ந்து தலைமுடிக்கு பயன்படுத்துவதால் இயற்கையான பளபளப்பைத் தரும். கூந்தல் சார்ந்த பிரச்சனைகள் நீங்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |