முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் செம்பருத்தி எண்ணெய்.., எப்படி தயாரிப்பது?
செம்பருத்தி பூவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, மற்றும் அந்தோசயனின் போன்ற உயிர்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், முடி மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடல் எடையைக் குறைக்கவும், மற்றும் இதய நலனுக்கும் பெரிதும் உதவுகிறது.
செம்பருத்தி பூ சார்ந்த தயாரிப்புகள் முடி உதிர்வைத் தடுத்து, முடியை அடர்த்தியாகவும் பளபளப்பாகவும் மாற்ற உதவுகின்றன.
செம்பருத்தி பூ எண்ணெய் முடி வளர்ச்சியைத் தூண்டவும், முடி உதிர்வைத் தடுத்து முடியை அடர்த்தியாகவும் கருமையாகவும் மாற்ற உதவும் மிகச் சிறந்த இயற்கை மூலிகை எண்ணெய் ஆகும்.
இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் அமினோ அமிலங்கள் மயிர்க்கால்களுக்கு ஊட்டமளித்து பொடுகை விரட்ட உதவுகிறது.
அந்தவகையில், முடி வளர்ச்சியை அதிகரிக்க செம்பருத்தி எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- செம்பருத்தி பூ- 15
- தேங்காய் எண்ணெய்- ½ லிட்டர்
எப்படி தயாரிப்பது?
முதலில் அடுப்பில் ஒரு இரும்பு வாணல் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வைத்து கொதிக்கவைக்கவும்.
அடுத்து இதில் சுத்தம் செய்த செம்பருத்தி இலைகளை சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவைக்கவும்.

இதற்கடுத்து எண்ணெய் நன்கு நிறம் மாறி வந்ததும் அடுப்பை அனைத்து எண்ணெய் ஆறியதும் இதனை வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
செம்பருத்தி எண்ணெயை உள்ளங்கையில் ஊற்றி, இரண்டு கைகளாலும் தேய்த்து முடியின் வேர் முதல் நுனி வரை நன்றாக தடவவும்.
பின்னர் 10 நிமிடங்கள் வரை மெதுவாக மசாஜ் செய்து ஊறவிட்டு கூந்தலை மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |