கருப்பான உதட்டை சிவப்பாக மாற்ற உதவும் இயற்கை லிப் பாம்: வீட்டிலேயே தயாரிக்கலாம்
பெண்கள் எப்பொழுதும் தங்கள் உதடுகளை அழகாக வைத்து கொள்ளத்தான் விரும்புவார்கள்.
தங்களின் உதடுகள் வெடிப்பு இல்லாமல் ஈரப்பதத்தோடு சிவப்பாக இருக்க வேண்டும் என்று தான் அனைத்து பெண்களும் விரும்புவார்கள்.
அந்தவகையில், கருப்பான உதட்டை சிவப்பாக மாற்ற இயற்கை லிப் பாம் வீட்டிலேயே தயாரிக்கலாம்.
1. ரோஸ் லிப் பாம்
தேவியான பொருட்கள்
- தேன் மெழுகு
- தேங்காய் எண்ணெய்
- உலர்ந்த ரோஜா இதழ்கள்
- அத்தியாவசிய எண்ணெய்
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தேன் மெழுகு மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு உருக்கிக்கொள்ளவும்.
பின் இதில் உலர்ந்த ரோஜா இதழ்கள் சேர்த்து நன்கு கலக்கவும்.
சூடு ஆறியதும் பின்னர் இதில் அத்தியாவசிய எண்ணெய் சேர்த்து கலந்தால் ரோஸ் லிப் பாம் தயார்.
இதனை ஒரு சிறிய டப்பாவில் சேகரித்து வைத்து நீண்ட நாட்களுக்கு வைத்து பயன்படுத்தலாம்.
2. ஆரஞ்சு லிப் பாம்
தேவையான பொருட்கள்
- தேன் மெழுகு
- தேங்காய் எண்ணெய்
- ஆரஞ்ச் தோல்
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தேன் மெழுகு மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு உருக்கிக்கொள்ளவும்.
பின் இதனுடன் சிறிதளவு எண்ணெய் மற்றும் ஆரஞ்சு தோல் சேர்த்து அவை நன்கு கரையும் வரை கொதிக்கவிடவும்.
பின்னர் சூடு ஆறியதும் ஒரு சிறிய டப்பாவில் சேகரித்து வைத்து இந்த ஆரஞ்சு லிப் பாமை பயன்படுத்தலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |