வசீகரமான இளஞ்சிவப்பு உதட்டை பெற உதவும் எளிய வீட்டு வைத்தியம்
பெண்கள் எப்பொழுதும் தங்கள் உதடுகளை அழகாக வைத்து கொள்ளத்தான் நினைப்பார்கள்.
தங்களின் உதடுகள் வெடிப்பு இல்லாமல் ஈரப்பதத்தோடு இருக்க வேண்டும் என்று தான் அனைத்து பெண்களும் விரும்புவார்கள்.
அந்தவகையில், இற்கையான முறையில் உதட்டை இளஞ்சிவப்பாக மாற்ற உதவும் எளிய வீட்டு வைத்தியம் குறித்து பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- சர்க்கரை-½ ஸ்பூன்
- தேன்- ¼ ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் சர்க்கரையை எடுத்து, அதனுடன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின் அதை உதடுகளில் தடவி 1-2 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
பிறகு 2 நிமிடம் அப்படியே ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
2. தேவையான பொருட்கள்
- எலுமிச்சை- ½
- சர்க்கரை- ½ ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் எலுமிச்சை சாறு, சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின் அதை உதடுகளில் தடவி 1-2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.
பிறகு வெதுவெதுப்பான நீரால் உதடுகளை கழுவ வேண்டும்.
இதனை வாரத்திற்கு ஒரு முறை என தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் உதடு இளஞ்சிவப்பாக மாறும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |