வெயிலில் கருப்பான முகத்தை வெள்ளையாக்க உதவும் பேஸ்பேக்.., எப்படி தயாரிப்பது?
பொதுவாக அனைவரும் முகத்தினை பொலிவாக வைத்துக்கொள்ள தான் விரும்புவார்கள்.
இருப்பினும் சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
அந்தவகையில், வெயிலில் கருப்பான முகத்தை வெள்ளையாக்க உதவும் பேஸ்பேக்கை எப்படி தயாரிப்பது என்று பாரக்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- வெள்ளரிக்காய்- 3 துண்டு
- கற்றாழை ஜெல்- 2 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் வெள்ளரிக்காய் மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து அரைக்கவும்.

பின் இவற்றை முகம், கழுத்து, கைகளில் தடவி 15–20 நிமிடம் வைத்து குளிர்ந்த நீரில் கழுவவும்.
இதனை தினமும் பயன்படுத்தி வந்தால் சருமத்திற்கு குளிர்ச்சி, ஈரப்பதம், புத்துணர்ச்சி கிடைக்கும்.
2. தேவையான பொருட்கள்
- பப்பாளி- 2 துண்டு
- எலுமிச்சை- ½
எப்படி பயன்படுத்துவது?
முதலில் பப்பாளியை மசித்து அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்துகொள்ளவும்.
பின் இவற்றை முகம், கழுத்தில் தடவி 15–20 நிமிடம் வைத்து குளிர்ந்த நீரில் கழுவவும்.
இதனை தினமும் பயன்படுத்தி வந்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முகம் பிரகாசமாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |