நரைமுடியை கருப்பாக மாற்றும் இயற்கை டை.., வீட்டிலேயே தயாரிக்கலாம்
நாம் அனைவருக்கும் முடி உதிர்தல், வலுவிழந்த முடி, வறண்ட முடி, பொடுகு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் இருக்கிறது.
இன்றைய நாளில் பெரும்பலான இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை நரை முடி.
அந்தவகையில், இயற்கையாக வீட்டிலேயே டை தயாரித்து பயன்படுத்துவதால் ஆரோக்கியமான கருமையான கூந்தலை பெறலாம்.
தேவையான பொருட்கள்
- கறிவேப்பிலை- 1 கைப்பிடி
- தேங்காய் எண்ணெய்- 3 ஸ்பூன்
- வேப்ப இலை- 1 கைப்பிடி
- வைட்டமின் ஈ கேப்சூல்கள்- 2
- தயிர்- 2 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் கறிவேப்பிலை மற்றும் வேப்பிலையை மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு மற்றொரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய், வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் மற்றும் தயிர் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்துக் கொள்ளவும்.
பின்னர் இந்த கலவையை சிறிது சூடாக்கி ஆறிய பின் கறிவேப்பிலை மற்றும் வேப்ப இலை கலவையை சேர்த்து நன்றாக கலக்கவும்.
பின் முடி மற்றும் உச்சந்தலையில் தயார் செய்து வைத்துள்ள ஹேர் மாஸ்க்கை தடவவும்.
ஒரு மணி நேரம் கழித்து கூந்தலை கழுவவும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |