வெள்ளைமுடியை கருமையாக மாற்ற உதவும் இயற்கை டை.., எப்படி தயாரிப்பது?
இன்றைய நாளில் பெரும்பலான இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை நரை முடி.
அந்தவகையில், நரைமுடியை கருப்பாக மாற்ற உதவும் இயற்கை டையை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கறிவேப்பிலை- 2 கைப்பிடி
- தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்
- கற்றாழை ஜெல்- 1 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு இரும்பு வாணலில் கறிவேப்பிலையை சேர்த்து நன்கு வறுத்து கருமையாக வந்ததும் எடுத்துக்கொள்ளவும்.
பின் அது ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து அந்த பொடியை சலித்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு கிண்ணத்தில் அரைத்த கறிவேப்பிலை பொடி, தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
அடுத்து இந்த பேஸ்டை தலைமுடி முழுவதும் தடவி ஒரு மணி நேரம் அப்படியே விட்டுவிடவும்.
இறுதியாக லேசான ஷாம்பு கொண்டு வெதுவெதுப்பான தண்ணீரில் கூந்தலை அலசிக்கொள்ளலாம்.
இந்த பேக்கை மாதத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நரைமுடி நிரந்தரமாக கருப்பாக மாறிவிடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |