நரைமுடி மறைந்து நிரந்தரமாக கருப்பாக உதவும் இயற்கை ஹேர் டை.., எப்படி தயாரிப்பது?
பொதுவாக முடி உதிர்தல், வலுவிழந்த முடி, வறண்ட முடி, பொடுகு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் அனைவருக்கும் இருக்கிறது.
அந்தவகையில், இயற்கை முறையில் நரைமுடியை கருப்பாக மாற்ற உதவும் ஹேர் டையை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அவுரிப்பொடி - 2 ஸ்பூன்
- வெந்தயம் - 1 ஸ்பூன்
- டீத்தூள் - 2 ஸ்பூன்
- நெல்லிப்பொடி - 1 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு வாணலில் வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிக்கவும்.
அடுத்து ஒரு டம்ளர் நீரை கொதிக்க வைத்து டீத்தூள் சேர்த்து கொதிக்கவைத்து நிறம் மாறி வந்ததும் அதை வடிகட்டி அதில் வெந்தயத்தூள் சேர்த்து கலக்கவும்.
பிறகு ஒரு இரும்பு பாத்திரத்தில் டீ நீரை சேர்த்து அதில் அவுரிப்பொடி மற்றும் நெல்லிப்பொடி சேர்த்து நன்றாக கலக்கவும்.
இதற்கடுத்து இதை இரவு முழுவதும் அப்படியே வைத்திருந்து மறுநாள் தலைமுடியில் நன்கு தடவி 45 நிமிடங்களுக்கு பிறகு மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.
இதனை வாரத்தில் 3 முறை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடி நிரந்தரமாக கருமையாக மாறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |