முடி வளர்ச்சியை முழங்கால் வரை அதிகரிக்க உதவும் மூலிகை எண்ணெய்.., எப்படி தயாரிப்பது?
பல பெண்களுக்கு முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பல பிரச்சனைகள் இருக்கும்.
அந்தவகையில், அடர்த்தியாக முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய் - 500ml
- கறிவேப்பிலை- 1 கைப்பிடி
- வெந்தயம்- 1 ஸ்பூன்
- கருஞ்சீரகம்- 1 ஸ்பூன்
- செம்பருத்தி பூ- 10
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு இரும்பு வாணலை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.
எண்ணெய் சூடானதும், அதில் கறிவேப்பிலை, வெந்தயம் மற்றும் கருஞ்சீரக விதைகளை சேர்த்து கொதிக்க விடவும்.
எண்ணெய் நன்கு நிறம் மாறி வந்ததும் அதை அடுப்பை அனைத்து பின் அதில் செம்பருத்திப் பூக்களை சேர்த்து கலக்கவும்.
இப்போது இந்த எண்ணெயை மூடி, இரவு முழுவதும் அப்படியே விட்டு மறுநாள், எண்ணெயை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் சேமித்து வைக்கவும்.
இப்போது இந்த எண்ணெயை தலைமுடியில் தொடர்ந்து பயன்படுத்தி வர முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |