அசுர வேகத்தில் அடர்த்தியாக முடி வளர உதவும் எண்ணெய்.., வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
ஆண், பெண் என அனைத்து மனிதர்களுக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை முடி உதிர்வு தான்.
முடி உதிர்வை நிறுத்தி அடர்த்தியாக வளர வீட்டிலேயே எளிய முறையில் எண்ணெய் தயார் செய்து பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்
- உலர்ந்த செம்பருத்தி பூ- 1 கப்
- உலர்ந்த நெல்லிக்காய்- 1 கப்
- தேங்காய் எண்ணெய்- 1 லிட்டர்
தயாரிக்கும் முறை
ஒரு கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி, குறைந்த வெப்பத்தில் சூடாக்கவும்.
பின் தேங்காய் எண்ணெயில் காய்ந்த செம்பருத்திப் பூக்கள் மற்றும் நெல்லிக்காய் கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை குறைந்த வெப்பத்தில் சுமார் 20 நிமிடங்கள் சூடாக்கவும். அதன் பிறகு, அடுப்பை அனைத்து இதனை நன்கு ஆற வைக்கவேண்டும்.
ஆறிய பிறகு செம்பருத்திப் பூக்கள் மற்றும் ஆம்லா விதைகளை வடிகட்டி, எண்ணெயை சுத்தமான பாட்டில் ஊற்றவும்.
அதன்பின் உச்சந்தலை முடிக்கு எண்ணெய் தடவி சில நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும்.
இதனை குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் அப்படியே விட்டு மென்மையான ஷாம்பூவுடன் தலைமுடியை நன்கு கழுவவும்.
You May Like This Video
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |