வெள்ளை முடியை நிரந்தரமாக கருப்பாக்க உதவும் இயற்கை Hairpack: எப்படி தயாரிப்பது?
முடி உதிர்தல், வலுவிழந்த முடி, வறண்ட முடி, பொடுகு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் அனைவருக்கும் இருக்கிறது.
அந்தவகையில், இயற்கை முறையில் நரைமுடியை கருப்பாக மாற்ற உதவும் Hairpackஐ எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- காபி தூள்- 2 ஸ்பூன்
- மருதாணி- 1 கைப்பிடி
- அவுரி பொடி- 4 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் காபி தூள் 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் இந்த காபி நீரை மிதமான சூட்டில் இருக்கும்போதும் அதை அவுரி பொடியுடன் சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல் கலந்து 15 நிமிடம் வைக்கவும்.
அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் கழுவி சுத்தம் செய்துவைத்த ,மருதாணி இலையை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து ஒரு துணியில் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து இந்த மருதாணி நீரை அவுரி பேஸ்ட் உடன் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
பின்னர் இந்த ஹேர்பேக்கை உங்கள் தலைமுடி முழுக்க தடவி அப்படியே அரை மணி நேரம் வைக்கவும்.
இறுதியாக தலைமுடியை மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.
இதனை மாதத்திற்கு இரண்டு முறை என தொடர்ந்து பயன்படுத்தி வர வெள்ளை முடி கொஞ்சம்கொஞ்சமாக கருப்பாக மாறத்தொடங்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |