முழங்கால் வரை முடி வளர உதவும் கறிவேப்பிலை.., எப்படி பயன்படுத்துவது?
பொதுவாக ஆண், பெண் என இருவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை முடி உதிர்வு.
அந்தவகையில், முழங்கால் வரை முடி வளர உதவும் கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கறிவேப்பிலை- 3 கைப்பிடி
- தேங்காய் எண்ணெய்- 3 ஸ்பூன்
- தயிர்- 2 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் கறிவேப்பிலையை நன்கு கழுவி உலரவைத்து வெயிலில் நன்கு காயவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் கறிவேப்பிலை நன்கு காய்ந்ததும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு கிண்ணத்தில் கறிவேப்பிலை பொடி, தேங்காய் எண்ணெய் மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.

இதற்கடுத்து இவற்றை முடியின் உச்சந்தலை முதல் நுனி வரை நன்கு தடவி ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும்.
ஒரு மணி நேரம் கழித்து மென்மையான ஷாம்பு கொண்டு கூந்தலை அலசிக்கொள்ளலாம்.
இதனை வாரத்திற்கு ஒரு முறை என தொடர்ந்து பயன்படுத்தி வர முடி நன்கு நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |