மென்மையான கூந்தலை பெற உதவும் கொரியன் ஹேர்மாஸ்க்.., எப்படி தயாரிப்பது?
பொதுவாக அனைவரும் தங்களின் முடி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவார்கள்.
ரசாயனம் கலந்த முடி பராமரிப்பு பொருட்கள், ஹார்மோன் பிரச்சனைகள் காரணமாக தலைமுடி பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன.
அதேபோல், பொதுவாக கொரியன் உணவு, கொரியன் சீரிஸ் மற்றும் கொரியன் பாடல்கள் மிகவும் வைரலாகி வருகிறது.
மேலும், கொரியன் பெண்களை போல் முகம், கூந்தல் இருக்க வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர்.
அந்தவகையில், மென்மையான கூந்தலை பெற உதவும் கொரியன் ஹேர்மாஸ்க்கை வீட்டிலேயே எப்படி தயாரித்து பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சாதம்- 1 கப்
- தண்ணீர் ¼ கப்
- தேங்காய் எண்ணெய்- 3 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் சாதம் மற்றும் தண்ணீர் சேர்த்து நினைக்க மென்மையாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் இவற்றை ஒரு கிண்ணத்தில் மாற்றி அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்துகொள்ளவும்.

அடுத்து இதனை உச்சந்தலையிலிருந்து தலைமுடியின் நுனி வரை தடவி ஒரு மணி நேரம் அபப்டியே ஊறவைக்கவும்.
இதன் பிறகு மென்மையான ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசிக்கொள்ளவும்.
இந்த கலவையை வாரத்திற்கு ஒரு முறை என தொடர்ந்து தலைமுடிக்கு பயன்படுத்தி வர கூந்தல் மென்மையாக மாறும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |