அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் இயற்கை சீரம்.., எப்படி தயாரிப்பது?
பொதுவாக ஆண், பெண் என இருவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை முடி உதிர்வு.
அந்தவகையில், அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் இயற்கை சீரத்தை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தண்ணீர்- 2 கப்
- கிராம்பு- 1 ஸ்பூன்
- கருஞ்சீரகம்- 1 ஸ்பூன்
- வெந்தயம்- 1 ஸ்பூன்
- ரோஸ்மேரி- 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை- 1 கொத்து
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் கிராம்பு, கருஞ்சீரகம், வெந்தயம், ரோஸ்மேரி மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்க்கவும்.
பின் இந்த கலவையை 10 நிமிடங்கள் நன்கு கொதிக்க விட்டு பின்னர் அதை முழுவதுமாக ஆற விடவும்.
அடுத்து இந்தக் கலவை ஆறியதும் வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி உச்சந்தலையில் முழுவதுவாமாக தெளிக்கவும்.

கூந்தலின் வேர்களுக்கு நினைக்க தெளித்து பின் 5 நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும்.
இரவு முழுவதும் இதை அப்படியே விட்டுவிடவும் காலையில் மென்மையான ஷாம்பூ கொண்டு அலசிக்கொள்ளலாம்.
இதனைதொடர்ந்து பயன்படுத்தி வருவதால் உச்சந்தையின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |