வழுக்கையில கூட முடி வளர வேண்டுமா? வாரத்தில் இரண்டு முறை இதனை பயன்படுத்தினாலே போதுமாம்
பொதுவாக இன்றைய காலத்தில்ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி கொட்டுதல், வழுக்கை விழுதல் என்பது ஒரு பெரும் பிரசனையாக உள்ளது.
இவை மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
மரபணுக்கள், மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, கெமிக்கல் உபயோகங்கள் போன்றவை இதற்கு காரணமாக கருதப்படுகின்றது.
இதனை ஒருசில இயற்கையான வழிகள் மூலம் போக்க முடியும். தற்போது அவற்றில் ஒரு வழியினை இங்கே பார்ப்போம்.
தேவையான பொருள்கள்
- வெந்தயம் - இரண்டு ஸ்பூன்
- கருஞ்சீரகம் - 2 ஸ்பூன்
- கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
செய்முறை
வெந்தயம் மற்றும் கருஞ்சீரகம் இரண்டையும் முதல் நாள் இரவே ஒரு நாள் இரவு முழுக்க ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ள வேண்டும்
அடுத்த நாள் காலையில் நன்கு ஊறிய வெந்தயம் மற்றும் கருஞ்சீரகத்தை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதற்கு ஊற வைத்து தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பயன்படுத்தி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
இவற்றை அரைக்கும் போது ஒரு கைப்பிடி பிரெஷ்ஷான கறிவேப்பிலை இலைகளையும் சேர்த்து நன்றாக அரைத்து பின்பு அந்த சாறை மட்டும் வடிகட்டி கொள்ள வேண்டும்.
இதை காட்டனில் தொட்டு தலைமுடியின் வேர்க்கால்களில் நன்கு படும்படியும் தலைமுடி முழுவதும் நன்கு அப்ளை செய்து ஒரு மணி நேரம் ஊற விட வேண்டும்.
பின்பு தலைமுடியை சீயக்காய் அல்லது மென்மையான ஷாம்பு கொண்ட அலசி கொள்ளலாம். இதனை வாரத்தில் இரண்டு முறை தாராளமாக பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.