நரைமுடியை இயற்கையாக கருப்பாக்க உதவும் கருப்பு எண்ணெய்.., எப்படி தயாரிப்பது?
பொதுவாக முடி உதிர்தல், வலுவிழந்த முடி, வறண்ட முடி, பொடுகு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் அனைவருக்கும் இருக்கிறது.
அதேபோல், இன்றைய காலத்தில் இளைஞர்கள் பெரும்பாலும் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று நரைமுடி.
அந்தவகையில், நரைமுடியை இயற்கையாக கருப்பாக்க உதவும் கருப்பு எண்ணெய்யை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வெந்தயம்- 5 ஸ்பூன்
- வெள்ளை எள்ளு- 5 ஸ்பூன்
- கறிவேப்பிலை- 1 கைப்பிடி
- தேங்காய் எண்ணெய்- 1 கப்
எப்படி தயாரிப்பது?
முதலில் அடுப்பில் ஒரு தவா வைத்து அதில் வெந்தயம், வெள்ளை எள்ளு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கருப்பாகும்வரை நன்கு வறுக்கவும்.
அடுத்து இதனை ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாட்டிலில் அரைத்த பொடி மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து ஒரு நாள் முழுக்க அப்படியே வைக்கவும்.

இதற்கடுத்து மறுநாள் காலையில் இதனை தலைமுடி முழுவதும் தடவவும்.
இதற்கடுத்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு தலையை மென்மையான ஷாம்பு பயன்படுத்தி அலசிக்கொள்ளலாம்.
இதனை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ந்து பயன்படுத்தினால் போதும் நரைமுடி இயற்கையாக கருப்பாக மாறும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |