அடர்த்தியான முடிக்கு இயற்கை முறை ஷாம்பு: ஈசியா வீட்டிலேயே தயாரிக்கலாம்
தலைமுடி உதிர்வு என்பது அனைவருக்கும் உள்ள ஒரு பெரிய பிரச்சனை.இதற்க்கு முக்கிய கரணம் ரசாயனம் கலந்த ஷாம்பூவை பயன்படுத்துவதுதான்.
இயற்கை முறையில் ஷாம்பு தயாரித்து பயன்படுத்தினால் முடி உதிர்வதை தடுத்து அடர்த்தியாக மற்றும் நீளமான முடி வளர்வதற்கு உதவும்.
இதில் ஒரு மாதத்திற்கு பயன்படுத்தும் வகையில் இயற்கை முறையில் ஷாம்பு தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- பூந்தி கொட்டை-100gm
- சீயக்காய்-100gm
- எலுமிச்சை-2
- பாதம் பிசினி-10gm
- வெந்தயம்-20gm
செய்முறை
முதலில் பூந்தி கொட்டையில் உள்ள விதையை நீக்க வேண்டும்.
பூந்தி கொட்டை மற்றும் சீயக்காயை சுடுதண்ணீர் ஊற்றி 24 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின் வெந்தயம் மற்றும் பாதம் பிசினி யை12 மணிநேரம் ஊற வைக்கவும்.
gedekconsulting.at
அடுத்து சீயக்காய், பூந்தி கொட்டை, பாதம் பிசினி மற்றும் வெந்தயத்தை நன்கு அரைக்க வேண்டும்.
பின் ஒரு பாத்திரத்தில் சுடுதண்ணீர் வைத்து அரைத்து வாய்த்த பேஸ்ட்டை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
இதனைத்தொடர்ந்து எலுமிச்சை பழச்சாறை இதில் ஊற்றவும் அப்போதுதான் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
பின் நுரை அடங்கியதும் வடிகட்டி இந்த இயற்கை முறை ஷாம்பூவை பயன்படுத்தலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |