வயதானாலும் இளமையாக இருக்க உதவும் தேங்காய் எண்ணெய்.., எப்படி பயன்படுத்துவது?
Homemade natural skin tightening facepack- பொதுவாக வயது அதிகரித்து செல்லும்போது முகத்தில் சுருக்கம் விழுவது என்பது இயல்பான ஒன்று.
சுருக்கும் விழுவதற்கு அதிகமாக வெயிலில் சுற்றுவது, சருமத்தை ஒழுங்காக பராமரிப்பது பாேன்ற பல காரணங்கள் உள்ளது.
அந்தவகையில், வயதானாலும் இளமையாக இருக்க உதவும் தேங்காய் எண்ணெயை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்
- தேன்- 1 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெயை எடுத்து, அதில் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

அதை முகம், கழுத்துப் பகுதியில் தடவி 40 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
இந்த பேக்கை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.
2. தேவையான பொருட்கள்
- பப்பாளி- 2 துண்டு
- தேன்- 1 ஸ்பூன்
- எலுமிச்சை- பாதி
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் பப்பாளியை மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதில் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு அதை முகத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
அதன் பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |