ஒரே வாரத்தில் முகத்தை வெள்ளையாக்க உதவும் ஓட்ஸ்.., எப்படி பயன்படுத்துவது ?
முகத்தில் பருக்கள் உண்டான பிறகு ஏற்படும் கரும்புள்ளிகள் முகத்தின் அழகை கெடுக்கும் விதமாக உள்ளன.
சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
அந்தவகையில், ஒரே வாரத்தில் முகத்தை வெள்ளையாக்க ஓட்ஸை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- ஓட்ஸ் பவுடர்- 2 ஸ்பூன்
- தேன்- 1 ஸ்பூன்
- பால்- 5 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் ஓட்ஸ் பவுடர் மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு இதில் பால் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

அடுத்து அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
இதனை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் வறண்ட சருமம் மென்மையாகவும், பொலிவாகவும் மாறும்.
2. தேவையான பொருட்கள்
- ஓட்ஸ் பவுடர்- 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- 1 ஸ்பூன்
- தயிர்- 2 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் ஓட்ஸ் பவுடர், மஞ்சள் தூள் மற்றும் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு அதை கருமையாக இருக்கும் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
அடுத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இந்த பேக்கை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் சருமத்தில் உள்ள கருமையை போக்கி, சீரான சரும நிறத்தைப் பெற உதவும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |