கருப்பான முகத்தை வெள்ளையாக்க உதவும் உருளைக்கிழங்கு.., எப்படி பயன்படுத்துவது?
பெண்கள் எப்போதும் தங்களின் முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ளத்தான் விரும்புவார்கள்.
ஆனால் சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
அந்தவகையில், கருப்பான முகத்தை வெள்ளையாக்க உதவும் உருளைக்கிழங்கை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு சாறு- 2 ஸ்பூன்
- தேன்- 2 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் உருளைக்கிழங்கு சாற்றினை எடுத்து, அதனுடன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

அதன்பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வர முகம் நன்கு பொலிவாக மாறும்.
2. தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு சாறு- 2 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்
- தேன்- 1 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் உருளைக்கிழங்கு சாற்றினை எடுத்து, அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
அடுத்து வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவ வேண்டும்.
இந்த கலவையை ஒருநாள் விட்டு ஒரு நாள் தொடர்ந்து பயன்படுத்தி வர சரும நிறத்தில் நல்ல மாற்றம் உண்டாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |