தொப்பையை குறைக்க இதோ ரகசிய பொடி: எப்படி தயாரிப்பது?
கட்டுப்பாடில்லாத உணவு பழக்கவழக்கம், உடற் பயிற்சி இல்லாத காரணமாக உடலில் தொப்பை வருகிறது.
இந்த தொப்பையை குறைக்க மெனக்கெடல்கள் ஏதுமின்றி வீட்டிலேயே சுலபமாக பொடியை தயாரித்து தண்ணீரிலோ அல்லது மோரிலோ கலந்து குடிக்கலாம்.
இதனால் தொப்பை சீக்கரமே கரையை ஆரம்பிக்கும். மேலும் செரிமான பிரச்னை, மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகள் வரவே வராது.
Adobe Stock
தேவையான பொருட்கள்
- சீரகம் - 1 கப்
- ஓமம் - 1 கப்
- சோம்பு - 1 கப்
செய்முறை
முதலில் ஒரு சிறிய கப் அளவு சீரகம், ஓமம், சோம்பு எடுத்துக் கொள்ளவும். மூன்றையும் ஒரே கப்பில் அளந்து எடுத்துக் கொள்ளவும்.
இந்த 3 பொருளையும் நன்றாக வாணலியில் வறுத்து ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.
நன்றாக காற்று போக முடியாத பாட்டிலில் ஸ்டோர் செய்து வைக்கவும்.
இந்த பொடியை தினமும் காலை, மாலை உணவிற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
ஒரு டம்ளரில் சுடு தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் அரைத்த பவுடரை ஒரு ஸ்பூன் சேர்க்கவும்.இதை உணவு உண்பதற்கு அரை மணி நேரம் முன்பு எடுத்துக்கொள்ள வேண்டும்.
உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற நோக்கம் இருப்பவர்கள் இந்த முறையை பின்பற்றலாம். இதனால் நீங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு உடல் எடை குறையும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |