உடனடியாக முகம் வெள்ளையாக மாற தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருள் போதும்
பெண்களுக்கு முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில், வீட்டிலிருந்தபடியே சரும பிரச்சனைகள் நீங்கி, முகம் வெள்ளையாக மாற தேங்காய் எண்ணெயை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்- 1 ஸ்பூன்
- தேன்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் தேங்காய் எண்ணெயில் தேன் கலந்து முகத்தில் தடவவும்.
பின் இதனை 15 முதல் 20 நிமிடம் ஊற வைத்து பின் தண்ணீரில் முகத்தை கழுவவும்.
2. தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்- 1 ஸ்பூன்
- கற்றாழை ஜெல்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு கலக்கவும்.
இதை உங்கள் தோலில் தடவி 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும்.
3. தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்- 1 ஸ்பூன்
- வைட்டமின் ஈ காப்ஸ்யூல்- 1
பயன்படுத்தும் முறை
ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் மற்றும் வைட்டமின் ஈ கேப்சூல்களை ஒன்றாக கலந்து முகத்தில் தடவவும்.
பின் இதை முகத்தில் மெதுவாக மசாஜ் செய்து இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடவும்.
இதற்கடுத்து 15 முதல் 20 நிமிடம் கழித்து தண்ணீரில் முகத்தை கழுவவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |