முகத்தில் உடனடி பொலிவை கொண்டுவர உதவும் அரிசி மாவு: எப்படி பயன்படுத்துவது?
பொதுவாக பெண்கள் அனைவரும் தங்களின் முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ளத்தான் விரும்புவார்கள்.
ஆனால் அதிகப்படியான சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
அந்தவகையில், இயற்கையான முறையில் முகத்தை பொலிவாக்க அரிசி மாவை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அரிசி மாவு- 1 ஸ்பூன்
- மஞ்சள்- ½ ஸ்பூன்
- பச்சை பால்- 2 ஸ்பூன்
- வைட்டமின் ஈ காப்ஸ்யூல்- 1
பயன்படுத்தும் முறை
முதலில், ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் அரிசி மாவு, மஞ்சள் தூள் மற்றும் பச்சை பால் சேர்த்து நன்கு கலக்கவும்.
இப்போது ஒரு வைட்டமின் ஈ காப்ஸ்யூலைச் சேர்த்து கலக்கவும்.
அடுத்து இந்த கலவையை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
பின்னர் முகத்தை வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தி முகத்தை கழுவிக்கொள்ளலாம்.
இந்த பேக்கை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து பயன்படுத்தி வர முகம் நன்கு பளபளப்பாகவும் பொலிவாகவும் மாறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |