ஒரே நாளில் முகம் பளபளக்க உதவும் ரோஸ் ஜெல்: வீட்டிலேயே தயாரிக்கலாம்
பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.
ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில், ஒரே நாளில் முகம் பளபளக்க உதவும் ரோஸ் ஜெல் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ரோஜா இதழ்- 1 கைப்பிடி
- பாதம் எண்ணெய்- சில துளிகள்
- கிளிசரின்- சில துளிகள்
- வைட்டமின் இ கேப்ஸ்யூல்- 1
- கற்றாழை ஜெல்- 1 துண்டு
தயாரிக்கும் முறை
முதலில் ரோஜா இதழ்களை நன்கு கழுவிய பின் இதை ஒரு பிளெண்டர் ஜாரில் போட்டு நன்கு கலக்கவும்.
பின் இதில் பாதம் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து ஒரு சல்லடை மூலம் வடிகட்டிக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் ரோஜா இதழ் பேஸ்ட் சேர்த்து அதனுடன் கிளிசரின் சேர்த்து கலக்கவும்.
இதனைத்தொடர்ந்து இதில் வைட்டமின் இ கேப்ஸ்யூல் மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து பேஸ்ட் போல் வரும்வரை நன்கு கலக்கவும்.
இந்த இயற்கையான ரோஸ் ஃபேஸ் ஜெல்லை 4 முதல் 5 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.
இந்த ஜெல்லை முகத்திற்கு தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகம் பளபளப்பாகவும், பொலிவாகவும் மாறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |