ரோஜா இதழ் இருக்கா? அப்போ உங்க உடம்பு பளபளக்க போகுதுனு அர்த்தம்
பொதுவாகவே பெண்களுக்கு தங்களது முகத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அதீத ஆசை இருக்கும்.
அதற்காக பல விடயங்களை செய்து வருவார்கள். ஒரு சிலர் இயற்கையான முறையிலும் ஒரு சிலர் செயற்கையான முறையிலும் முயற்சி செய்து பார்ப்பார்கள்.
இயற்கையாகப் பயன்படுத்தும் அனைத்து க்ரீம்களில் இந்த ரோஜா இதழ்கள் பயன்படுத்துவார்கள். இந்த இதழில் பல வகையான சத்துகள் நிறைந்திருகின்றது.
இதை சருமத்திற்கு பயன்படுத்துவதால் சருமத்திற்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். ரோஜா இதழ்கள் பயன்படுத்தி முகம் மற்றும் உடலை எப்படி அழகாக மாற்றலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
-
எலுமிச்சை பழம் – 1
-
வெள்ளை வினிகர் -2 ஸ்பூன்
- ரோஜா பூ இதழ்கள் – 1கப்
- புதினா இலைகள் – 1கப்
செய்முறை
-
முதலில் ரோஜா இதழ்கள் மற்றும் புதினா இலைகள் இரண்டையும் வெயிலில் காய வைத்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- இதில் எலுமிச்சை சாற்றை பிழிந்து எடுத்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வரவும்.
- எலுமிச்சையால் ஒவ்வாமை ஏற்படும் என்று நினைப்பவர்கள் வெள்ளை வினிகரை சேர்த்துக்கொள்ளலாம்.
- இதை உடல் முழுவதும் பூசி, சுமார் அரை மணித்தியாலத்திற்கு விட்டு விட்டு பின் குளிக்கவும்.
- இதை வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை செய்து வர உடலில் நல்ல மாற்றத்தை கவனிக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |