முடியில் நீளத்தை முழங்கால் வரை அதிகரிக்க உதவும் ஹேர்பேக்.., எப்படி தயாரிப்பது?
பொதுவாக அனைவருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை முடி உதிர்வு தான்.
முக்கியமாக பல பெண்களுக்கு முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பல பிரச்சனைகள் இருக்கும்.
அந்தவகையில், அடர்த்தியாகவும் நீளமாகவும் முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் ஹேர்பேக்கை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ரோஜா- 5
- கற்றாழை ஜெல்- 2 ஸ்பூன்
- தயிர்- 2 ஸ்பூன்
எப்படி தயாரிப்பது?
முதலில் மிக்ஸி ஜாரில் ரோஜா பூவை சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளவும்.
பின் இதனையுடன் கற்றாழை ஜெல் மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்.
அடுத்து இந்த ஹேர் மாஸ்க்கை கூந்தலில் உச்சி முதல் நுனி வரை முழுவதும் தடவவும்.
இதற்கடுத்து ஒரு மணி நேரம் கழித்து கூந்தலை மென்மையான ஷாம்பூ கொண்டு வெதுவெதுப்பான நீரில் அலசிக்கொள்ளலாம்.
இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை தொடர்ந்து தலைமுடியில் பயன்படுத்தி வர முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |