முகத்தில் உடனடி பளபளப்பை பெற உதவும் சந்தனம்.., எப்படி பயன்படுத்துவது?
பெண்களுக்கு பொதுவாக முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ளதான் விரும்புவார்கள்.
அந்தவகையில், முகத்தில் உடனடி பளபளப்பை பெற சந்தனத்தை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- சந்தன பொடி- 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்
- கற்பூரம்- 1 சிட்டிகை
- பால்- 3 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் சந்தனப் பொடி, மஞ்சள் தூள், கற்பூரம் மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின் அதை இரவு தூங்கும் போது சருமத்தில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.
இதனை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் முகம் பளபளப்பாக மாறும் மற்றும் முகப்பருக்கள் நீங்கும்.
2. தேவையான பொருட்கள்
- சந்தன பொடி- 1 ஸ்பூன்
- ரோஸ் வாட்டர்- 3 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் சந்தன பொடி, ரோஸ்வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின் அதை முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் முகம் பளபளப்பாக மாறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |