வீட்டிலேயே முகத்தின் கருமையை போக்க உதவும் பேக்.., எப்படி தயாரிப்பது?
பொதுவாக அனைவரும் முகத்தினை பொலிவாக வைத்துக்கொள்ள தான் விரும்புவார்கள்.
இருப்பினும் சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
அந்தவகையில், வீட்டிலேயே முகத்தின் கருமையை போக்க உதவும் பேக்கை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ஓட்ஸ் பொடி- 1 ஸ்பூன்
- சர்க்கரை- 1 ஸ்பூன்
- பால்- 6 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் ஓட்ஸ் பொடி, சர்க்கரை மற்றும் பால் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
பின்னர் இதனை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவி நன்கு உலரவைக்கவும்.

இதற்கடுத்து முகத்தில் லேசாக தண்ணீர் சேர்த்து மென்மையான 5 நிமிடம் வட்டவடிவில் மசாஜ் செய்யவும்.
இறுதியாக குளிர்ந்த நீரால் முகத்தை சுத்தமாக கழுவிக்கொள்ளலாம்.
இதை வாரத்திற்கு 2 முறை என தொடர்ந்து பயன்படுத்தி வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளிச்சென்று மாறும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |