எப்பேர்ப்பட்ட கருவளையத்தையும் போக்க வேண்டுமா? இதோ சூப்பரான டிப்ஸ்!
பொதுவாக ஆண், பெண் என இருபாலருமே கருவளைய பிரச்சனையை சந்திப்பதுண்டு.
தூக்கமின்மை, வேலைப்பளு, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளாலும், வைட்டமின் பி12 வைட்டமின் ஈ, வைட்டமின் கே, மற்றும் டி ஆகியவற்றின் குறைபாட்டாலும் கண்களுக்கு கீழ் உள்ள சரும நிறம் மாறுவதை கருவளையம் என்கிறோம்.
கண்ணுக்குள் கீழ் தோன்றும் கருவளையம் என்பது உங்களுடைய அழகுக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் தான் கேடு.
இதனை எளியமுறையில் போக்க சூப்பரான டிப்ஸ் ஒன்றை இங்கே பார்ப்போம்.
image - indiatimes
தேவையானவை
- கற்றாழை ஜெல் - 2 ஸ்பூன்
- வைட்டமின் ஈ ஆயில் - 1 ஸ்பூன்
- ரோஸ் வாட்டர் - 1 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் - ஒரு ஸ்பூன்
- எசன்ஷியல் ஆயில் - 4 சொட்டு
செய்முறை
முதலில் ஒரு பௌலில் கற்றாழை ஜெல்லை எடுத்து அதை ஒரு ஸ்பூன் வைத்து கட்டியில்லாமல் நன்கு அடித்துக் கொள்ளுங்கள்.
இப்போது அதனுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து அது ஜெல்லுடன் நன்கு மிக்ஸ் ஆகும்படி கலந்து கொள்ள வேண்டும்.
அதன்பிறகு வைட்டமின் ஈ ஆயில் மற்றும் தேங்காய் எண்ணெய் மற்றும் எசன்ஷியல் ஆயில் சேர்த்து நன்கு ஒன்றுடன் ஒன்று கலக்கும் வரை மிக்ஸ் செய்ய வேண்டும்.
பின்பு இதை சுத்தமான கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டு தினமும் இரவு தூங்கச் செல்லும்முன் முகத்தை கழுவிவிட்டு கண்ணுக்குக் கீழே அப்ளை செய்ய வேண்டும்.
இதை ப்ரிட்ஜில் வைத்து இரண்டு மாதங்கள் வரை பயன்படுத்தலாம். வெளியில் வைத்து 1 மாதங்கள் வரை பயன்படுத்தலாம். இதில் சேர்க்கப்பட்டிருக்கும் வைட்டமின் ஈ ஆயில் க்ரீம் கெட்டுப் போகாமல் வைத்திருக்கச் செய்யும்.