கட்டுக்கடங்காத கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய்: எப்படி தயாரிப்பது?
நம் அனைவருக்கும் இருக்கும் முக்கியமான பிரச்சனைகளில் முடி பிரச்சனைகளும் ஒன்று.
முடி உதிர்தல், பொடுகு தொல்லை, வழுக்கை, வலுவிழந்த முடி மற்றும் நரை முடி என பல்வேறு முடி பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம்.
இயற்கையான முறையிலேயே முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வேம்பாளம் பட்டை- 40g
- தேங்காய் எண்ணெய்- 200ml
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் வேம்பாளம் பட்டை சேர்த்து சூடுபடுத்தவும்.
பின் நிறம் மாறி வந்ததும் இதனை எடுத்து ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே வைத்துக்கொள்ளவும்.
அடுத்த நாள் இந்த எண்ணெயை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் தலைமுடியில் நன்கு இந்த எண்ணெயை தடவி மசாஜ் செய்து ஊறவைத்து 2 மணி நேரத்திற்கு பின் அலசிக்கொள்ளலாம்.
இந்த எண்ணெயை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்திவந்தால் ஒரே மாதத்தில் கூந்தல் வளர்ச்சியடையும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |