நூற்றுக்கணக்கான குடியிருப்புகளில் இருந்து மக்கள் வெளியேற்றம்... பிரித்தானிய நகரமொன்றில் திடீர் அவசரநிலை

Northern Ireland
By Arbin Aug 19, 2024 03:39 AM GMT
Report

வடக்கு அயர்லாந்தின் பெல்ஃபாஸ்டிலிருந்து 9 மைல் கிழக்கே அமைந்துள்ள Newtownards பகுதியில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட ஆபத்தான வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியது.

மக்கள் வெளியேற்றம்

தகவலை அடுத்து சம்பவப்பகுதியில் பொலிசார் குவிக்கப்பட்டனர். அத்துடன், 400 மீற்றர் சுற்றளவில், வசிக்கும் மக்கள் வெளியேற்றவும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

நூற்றுக்கணக்கான குடியிருப்புகளில் இருந்து மக்கள் வெளியேற்றம்... பிரித்தானிய நகரமொன்றில் திடீர் அவசரநிலை | Homes Evacuated Huge Emergency Response

சுமார் 450 குடியிருப்புகளில் உள்ள மக்கள் இதனால் பாதிப்புக்கு உள்ளானார்கள். இந்த நடவடிக்கை சில நாட்கள் நீடிக்கும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், சூழ்நிலை சிக்கலாக உள்ளது என்றும் உள்ளூர் கவுன்சிலர் பீட் வ்ரே உறுதிப்படுத்தியுள்ளார்.

குறைந்தது 5 நாட்கள் தேவைப்படும் என குறிப்பிட்டுள்ள அவர், ராணுவத்தில் இருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என்றார். வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, பாதசாரிகள் மற்றும் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அப்பகுதி குடியிருப்பாளர்களுக்கு என அவசர உதவி மையம் ஒன்றும் அமைக்கபப்ட்டு, உதவிகள் முன்னெடுக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை பகல் 10 மணிக்கு அப்பகுதி மக்களை வெளியேற்றத் தொடங்கினர்.

தற்போதும் ஆபத்தான கட்டத்தில்

இன்னும் சில நாட்கள் தேவைப்படும் என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பொறுமையுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நூற்றுக்கணக்கான குடியிருப்புகளில் இருந்து மக்கள் வெளியேற்றம்... பிரித்தானிய நகரமொன்றில் திடீர் அவசரநிலை | Homes Evacuated Huge Emergency Response

மேலும் ராணுவ அதிகாரிகள் உட்பட, பல்வேறு அமைப்புகள் தீவிரமாக பணியாற்றி வருவதாகவும், மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களுக்கு மன்னிப்புக் கோருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டெடுக்கப்பட்டுள்ள வெடிகுண்டானது தற்போதும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவே நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US